விவசாயி அரிவாளால் வெட்டி கொலை


விவசாயி அரிவாளால் வெட்டி கொலை
x

கமுதி அருகே விவசாயி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்துவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே விவசாயி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்துவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரியமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியசாமி (வயது65). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நேற்றுமுன்தினம் முனியசாமி தனது வீட்டை பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டுக்காரரான வேல்முருகனுக்கும் ஏற்பட்ட வாய்தகராறில் முனியசாமியை, அரிவாளால் வேல்முருகன் வெட்டியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது

இது குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்தனர். போலீசார் முனியசாமி உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story