தனியார் மில் மேற்பார்வையாளர் கொலை


தனியார் மில் மேற்பார்வையாளர் கொலை
x

அலங்காநல்லூர் அருகே வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய தனியார் மில் மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை


அலங்காநல்லூர் அருகே வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய தனியார் மில் மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகன் பொன்மணி (வயது 25). இவர் நகரியில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பொன்மணி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கம்மாபட்டி அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த நிைலயில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் மாவட்டபோலீல் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கொலை செய்யப்பட்ட பொன்மணியின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story