சிறுமியை கொன்று வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பிய ெகாடூர தந்தை


சிறுமியை கொன்று வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பிய ெகாடூர தந்தை
x

சிறுமியை கொலை செய்து வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தப்பிய கொடூர தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை


சிறுமியை கொலை செய்து வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தப்பிய கொடூர தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

8 வயது சிறுமி

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. டெய்லர். இவரது மனைவி பிரிய தர்ஷினி. இவர்களது மகள் தர்ஷினி (வயது8). 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று காளிமுத்து தனது மகளை சிவகங்கையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனால் தனியாக இருந்த பிரியதர்ஷினி வீட்டை பூட்டி விட்டு மேலூரில் உள்ள அவரது அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டினர் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நேற்று இரவு பிரியதர்ஷினி வீட்டுக்கு வந்துள்ளார். அவர் கதவை திறந்து உள்ளே சென்றபோது உடல் அழுகிய நிலையில் மகள் தர்ஷினி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விசாரணை

உடனே இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உதவி கமிஷனர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சிறுமியின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரியதர்ஷினி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காளிமுத்து பெற்ற மகளை கொலை செய்து வீட்டில் வைத்து விட்டு தப்பியது தெரிய வந்தது. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

எனவே அவர் சிக்கினால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூர செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story