மகளை தாக்கிய மருமகன் கோடரியால் வெட்டிக்கொலை


மகளை தாக்கிய மருமகன் கோடரியால் வெட்டிக்கொலை
x

மகளை தாக்கிய மருமகனை கோடரியால் மாமனார் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்

கமுதி,

மகளை தாக்கிய மருமகனை கோடரியால் மாமனார் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடரியால் வெட்டிக்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது47). இவருடைய மனைவி காளீசுவரி (39)., இவர்களுக்கு 19 வயதில் மகன், 16 வயது மகள் உள்ளனர். உதயசூரியன் மதுபோதையில் தனது மனைவி காளீசுவரியை அடிக்கடி தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் உதயசூரியன் மது போதையில் மனைவியை தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த மாமனாரான அதே ஊரை சேர்ந்த உருவாட்டி (75) ஓடிவந்துள்ளார். அப்போது மாமனார், மருமகன் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாமனார் உருவாட்டி, கோடரியால் தனது மருமகன் உதயசூரியனை சரமாரியாக வெட்டியதாக தெரியவருகிறது. இதில் படுகாயம் அடைந்த உதயசூரியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் கமுதி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது.

கைது

இந்த சம்பவம் குறித்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் உருவாட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story