இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தகராறு; வாலிபர் கொலை
உச்சிப்புளி அருேக இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனைக்குளம்,
உச்சிப்புளி அருேக இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் அடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கல்கிணற்று வலசை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி வள்ளிமயில் நேற்றுமுன்தினம் உறவினர் நாகேசுவரி என்பவர் வீட்டுக்கு சென்றபோது திடீரென இறந்துள்ளார்.
இந்த நிலையில் இறந்தவரின் உடலை அவர் வாழ்ந்து வந்த வீட்டிற்கு எடுத்து வந்து இறுதிச் சடங்கை முடித்து அடக்கம் செய்யப்பட்டது.
உறவினர்கள் நாகேசுவரி, முருகவள்ளி ஆகியோர் விருப்பப்படி இவர்களது வீட்டில் வைத்து காரியம் செய்து நல்லடக்கம் செய்யவில்லை என முருகவள்ளியின் கணவர் ராஜாராம் தகாத வார்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ராஜாராம் மகன்கள் இருலேஸ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சேர்ந்து கோவிந்தன் மகன் கோட்டைகண்ணன் (வயது 39) தான் இதற்கு காரணம் என்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோட்டை கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து கோவிந்த மகன் சித்திரைச் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் இருலேஸ், ராஜாராம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.