11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சிக்கினார்


11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சிக்கினார்
x

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி போலீசாரிடம் சிக்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வெங்கடேசன் (வயது 42). கடந்த 2008-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் வெங்கடேசனை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 18-5-2011 அன்று 5 நாட்கள் பரோலில் வெங்கடேசன் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் பரோல் முடிந்து மீண்டும் அவர் சிறைக்கு செல்லாமல் தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர். இருப்பினும் அவர் 11 ஆண்டுகளாக சிக்கவில்லை. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் போலீசார் ஞானம், மணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் வெங்கடேசனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் வெங்கடேசன் சொந்த ஊருக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்புரையூர் கிராமத்துக்கு சென்று வெங்கடேசனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story