ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவருக்கு கொலை மிரட்டல்

பட்டுக்கோட்டை அருகே பொங்கல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்தில் காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை;

கத்திக்குத்து
பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் மேல சூரியதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமார் கத்தியால் குத்தப்பட்டார்.இதில் காயமடைந்த பிரவீன்குமார் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ெகாலை மிரட்டல்
இந்தநிலையில் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்த நெப்போலியன்(43), அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர், ரெங்கராஜ் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பிரவீன்குமாரிடம் கத்தியை காட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரவீன் குமார் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெப்போலியனை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.