ஆடிப்பெருக்கையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடிப்பெருக்கையொட்டி  முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடிப்பெருக்கையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவில் மற்றும் எட்டரப்பள்ளி வேல்முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று காலை முதலே சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதையடுத்து முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி ஆடுகள் கோழிகள் கோவிலுக்கு தானமாக வழங்கினர்.

மேலும் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆவல்நத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அங்குள்ள குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் காசி விஸ்வநாதர் சாமி தரிசனம் செய்தனர்.. இந்த தரிசனத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.


Next Story