முருகன், சாந்தன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல்

முருகன், சாந்தன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல்
x

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என வக்கீல் தெரிவித்தார்.

வேலூர்

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என வக்கீல் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் ஜெயிலில் முருகன் மற்றும் சாந்தன் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை நேற்று வக்கீல்கள் துரைஅருண், சிவா ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் வக்கீல் துரைஅருண் அளித்த பேட்டியில், இதே வழக்கில் ஜெயிலில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ள நிலையில் சாந்தன் மற்றும் முருகனுக்கும் தங்களது விடுதலை தொடர்பாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருவரின் விடுதலை தொடர்பாக சந்தித்து பேசினோம். சுப்ரீம் கோர்ட்டில் முருகன் மற்றும் சாந்தன் சார்பில் விடுதலை தொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். பேரறிவாளன் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுப்படுத்தியதை அடுத்து கோர்ட்டை நாட உள்ளோம். நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருவரும் உள்ளனர். சாந்தன் தனது தாய் மற்றும் சகோதரரை சந்திக்கும் ஏக்கத்தில் உள்ளார். விடுதலைக்கு பிறகு யாழ்ப்பாணம் சென்று குடும்பத்துடன் இருக்கவே அவர் விரும்புகிறார், என்றனர்.

Next Story