த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கண்டித்து த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கண்டித்து த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா, டுவிட்டரில் இழிவுபடுத்தி பதிவிட்ட பா.ஜனதாவின் நவீன் ஜிண்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் வடக்கு மாவட்டம் சார்பில் நேற்று மாலை திருப்பூர் சி.டி.சி. கார்னரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நசீர்தீன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் காஜா மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பராயன் எம்.பி., பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாரீஷ், மாநில செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்திய தேசிய லீக் கட்சி

இதுபோல் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜாவீத் உசேன் வரவேற்றார். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதா கட்சியின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப், இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் அஸ்லம், மாநில அமைப்பு செயலாளர் நாசர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.


Related Tags :
Next Story