"குர்-ஆன்" பரிசளித்த இஸ்லாமிய இளைஞர்: பக்தியுடன் கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்ட அண்ணாமலை...!


குர்-ஆன் பரிசளித்த இஸ்லாமிய இளைஞர்: பக்தியுடன் கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்ட அண்ணாமலை...!
x

டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புவதாக அண்ணாமலை கூறினார்.

சென்னை,

'என் மண், என் மக்கள்' என்னும் பெயரில் அண்ணாமலை பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குதான் பாஜகவில் இணைந்தேன். கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

மேலும், அண்ணாமலை கூறுகையில், அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நாங்கள் ஒதுக்கவில்லை. அவர் விரக்தியில் இல்லை, முதல்-அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே "என் மண் என் மக்கள்" நடை பயணத்தின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய இளைஞர் ஒருவர் "குர்-ஆன்" புத்தகத்தை வழங்கிய நிலையில், "குர்-ஆனை" கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்டார் அண்ணாமலை.


Next Story