முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் சர்பியா நகரில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 71 குடும்பங்களை சேர்ந்த முஸ்லிம்கள் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குறைந்த வாடகையில் வசித்து வந்த இவர்களிடம், தற்போது தனிநபர் ஒருவர் வாடகையை திடீரென உயர்த்தி கேட்டதோடு, நன்கொடை வழங்க வேண்டும் என கூறினார். இதை கண்டித்து அப்பகுதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்த வேண்டும் என நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டுவந்தனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் போராட்டம் நடந்த அனுமதி கேட்டு நெல்லிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர் பாரூக், வி.சி.க. மாவட்ட துணை செயலாளர் அஸ்கர் அலி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story