சேலத்தில் முஸ்லிம்கள் போராட்டம்


சேலத்தில் முஸ்லிம்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2022 1:30 AM IST (Updated: 1 Oct 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து சேலத்தில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

மத்திய அரசை கண்டித்து சேலத்தில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் முழக்க போராட்டம்

பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்புக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்ட ஷாஹின்பாக் கூட்டமைப்பு சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பதால் அங்கு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

68 பேர் கைது

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சையத் மூசா தலைமையில் ஏராளமானவர்கள் ஊர்வலமாக கோட்டை மைதானத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தொடக்க முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், என்.ஐ.ஏ. வை கண்டித்தும் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

ஆனால் அவர்களில் சிலர் கைது செய்ய உடன்படாததால் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்து சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.


Next Story