முத்து முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி களைகட்டிய எருதாட்டம்
மகுடஞ்சாவடி புதூரில் முத்து முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நிகழ்ச்சி களைகட்டியது.
சேலம்
இளம்பிள்ளை:
எருதாட்டம்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி கூடலூரில் உள்ள முத்து முனியப்பன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி கூடலூர் முத்து முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட திடலில் எருதாட்டம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் உற்சாகத்துடன் எருதுகளை பிடித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
களைகட்டிய இந்த எருதாட்டத்தை தேவராயன்பாளையம், குன்னிப்பாளையம், ஆண்டிபாளையம், மேட்டுவளவு, மகுடஞ்சாவடி உள்பட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story