முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x

தியாகதுருகம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பாரதம் படித்தல் மற்றும் சாமி வீதி உலாவும், நேற்று முன்தினம் அலகு போடுதல், காளி கோட்டை இடித்தல், தீ மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருள அங்கே திரண்டு நின்ற பக்தர்கள்வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி இன்று(சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் தாலாட்டுடன் விழா நிறைவடைகிறது.


Next Story