சின்னசேலம் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


சின்னசேலம் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:42 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள பாக்கம்பாடி தெற்கு காட்டுக்கொட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் நேற்று அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அலகு குத்தியும்,காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். தொடர்ந்துஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story