முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் திருக்கல்யாணம், சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், முன்னாள் அமைச்சர் ப.மோகன் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.


Next Story