விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்


விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
x

வருங்காலங்களில் மக்கள் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் தடைகள் நீங்கி அவர்களது வாழ்வில் அன்பு, அமைதி, ஆரோக்கியம் செழித்திட விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நம் அனைவராலும் போற்றப்படும் முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் அவதரித்த தினமான விநாயக சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயக பெருமானை வணங்கி தொடங்கினால், எவ்வித தடங்களுமின்றி நிறைவாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

சமுதாயத்தில் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் களைந்து சமுதாய ஒற்றுமை, மத நல்லிணக்கத்தோடு விநாயக பெருமானை வணங்கி விநாயக சதூர்த்தியை கொண்டாடி மகிழ்வோம்.

வருங்காலங்களில் மக்கள் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் தடைகள் நீங்கி அவர்களது வாழ்வில் அன்பு, அமைதி, ஆரோக்கியம் செழித்திட விநாயகரின் அருள் துணை நிற்கட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story