அரசு கல்லூரியில் எனது மண்-எனது தேசம் நிகழ்ச்சி


அரசு கல்லூரியில் எனது மண்-எனது தேசம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:46 PM GMT)

வேதாரண்யம் அரசு கல்லூரியில் எனது மண்-எனது தேசம் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எனது மண், எனது தேசம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி (பொறுப்பு) தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் நேருயுகேந்திரா நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன், வேதாரண்யம் ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். டெல்லியில் அமைக்கப்பட உள்ள அமிர்தா தோட்டத்திற்கு நாடு முழுவதும் 60 லட்சம் கிராமங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் சுதந்திர போராட்டம் நடைபெற்ற வேதாரண்யத்தில் இருந்து 5 மண் கலயங்களில் புனித மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் எனது மண், எனது தேசம் திட்டத்தை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகளின் ஊர்வலம் நடந்தது.


Next Story