வடமாநில இளம்பெண் மர்ம சாவு
பரமத்தி அருகே வடமாநில இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் இறந்து கிடந்தார்.
பரமத்திவேலூர்
வடமாநில இளம்பெண்
சத்தீஸ்கார் மாநிலம், கிஸ்கோ டா பகுதியைச் சேர்ந்தவர் சந்துராம்கவுேட. இவரது மகள் மனிஷாகவுடே (வயது 18). திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் இவர் கடந்த 6 மாதங்களாக பரமத்தி அருகே காளிபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை மனிஷாகவுடே நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பின்னர் அவருடன் வேலை பார்த்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர்.
தற்கொலை
அப்போது மனிஷாகவுடே அவர் தங்கி இருந்த வீட்டில் உள்ள கழிவறையில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இது குறித்து பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்தி போலீசார் மனிஷாகவுடேவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்த வடமாநில இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.