மாயமான பெண் போலீசில் தஞ்சம்


மாயமான பெண் போலீசில் தஞ்சம்
x

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் தஞ்சமடைந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் தஞ்சமடைந்தார்.

மாயம்

ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவியாக காமனூர்தட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி இந்துமதி கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது வெற்றியை எதிர்த்து நாயக்கனேரி ஊராட்சியை சேர்ந்த சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் இந்துமதி தலைவராக பதவி ஏற்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துமதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் பாண்டியன் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசில் தஞ்சம்

இந்தநிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட இந்துமதி நேற்று இரவு ஆம்பூர் தாலுகா போலீசில் தஞ்சம் அடைந்தார்.

இதுகுறித்து இந்துமதி போலீசாரிடம் கூறியதாவது:-

நான் மன உளைச்சல் காரணமாக தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றேன். தர்மபுரி நோக்கி பஸ்சில் பயணம் செய்த போது தொலைக்காட்சி செய்திகளை செல்போனில் பார்த்தேன்.

அப்போது எனது கணவர் என்னை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே நான் திரும்பி வந்துவிட்டேன். என்னை யாரும் கடத்தி செல்லவில்லை.

எனக்கும் எனது கணவருக்கும் இடையே சிறு பிரச்சினை இருந்தது. ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் இதுநாள் வரை தலைவர் பதவி ஏற்கவில்லை.

இதனால் நான் மேலும் மன உளைச்சல் அடைந்தேன். எனவே மன அமைதிக்காக உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு

இதனைத் தொடர்ந்து இந்துமதி 2 பெண் போலீசார் பாதுகாப்புடன் சோலூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story