குறுவை நாற்றங்காலில் மர்ம புழுக்கள் தாக்குதல்


குறுவை நாற்றங்காலில் மர்ம புழுக்கள் தாக்குதல்
x

சீர்காழி பகுதியில் குறுவை நாற்றங்காலில் மர்ம புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

குறுவை சாகுபடி

சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாய் நாற்றங்கால் முறையில் நெல் விதை விடப்பட்டு, எந்திரங்கள் மூலம் நட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது பாய் நாற்றங்காலில் விடப்பட்ட விதைகளில், நாற்றுகள் நன்றாக வளர்ந்து வருகிறது.

நாற்றங்காலில் புழுக்கள் தாக்குதல்

இந்த நிலையில் நாற்றங்காலில் கடந்த சில நாட்களாக திடீரென மர்ம புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாற்றங்கால் கருகி வருகின்றன.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடிக்காக நடவு செய்ய பாய் நாற்றங்கால் முறையில் நெல் விதை விடப்பட்டுள்ளது. 10 நாட்களே ஆன நிலையில் தற்போது நாற்றங்காலில் திடீரென புழுக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் நாற்று விதை கருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்திட மருந்துகள் பயன்படுத்தினாலும், நாற்றுகள் பாதி அளவே தேரும் நிலை உள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டும்

கடந்த சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் தவித்து வந்தோம். தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாற்றங்காலில் பூச்சி தாக்குதலால் கவலை அடைந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட நாற்றங்காலுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் பூச்சி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story