நடிகை விஜயலட்சுமி மீது காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்..!


நடிகை விஜயலட்சுமி மீது காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்..!
x

நடிகை விஜயலட்சுமி மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது கொலை மிரட்டல், மோசடி, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையின்போது, அவசரப்பட்டு, பிறர் பேச்சை கேட்டு புகார் கொடுத்துவிட்டேன். இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி எழுதிக்கொடுத்தார். அதன்பின் விஜயலட்சுமி பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். புகாரை வாபஸ் பெற்றுவிட்ட சென்ற விஜயலட்சுமி, தற்போது சீமானுக்கு எதிராக பேசி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சீமானையும் நாம் தமிழர் கட்சியினரையும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு மிரட்டுவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





1 More update

Next Story