நாடார் சரசுவதி என்ஜினீயரிங் கல்லூரியில்உலக தரநிர்ணய தின விழிப்புணர்வு


நாடார் சரசுவதி என்ஜினீயரிங் கல்லூரியில்உலக தரநிர்ணய தின விழிப்புணர்வு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடார் சரசுவதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக தர நிர்ணய தினத்தையொட்டி, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை மண்டல அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி நாடார் சரசுவதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக தர நிர்ணய தினத்தையொட்டி, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை மண்டல அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில், மதுரை மண்டல இந்திய தரக்கட்டுப்பாட்டு இணை இயக்குனர் ஹேமலதா பனிக்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story