நாகமங்கலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


நாகமங்கலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

நாகமங்கலம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

மணிகண்டம்:

மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலத்தில் அம்ருதமந்திர கணபதி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் மாரியம்மன், முருகன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 11-ந் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அன்று மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை கூடத்தில் கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலையில் அம்ருதமந்திர கணபதி விநாயகர் கோவில் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நாகமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாகமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story