சிவகிரி அருகே நாகாத்தம்மன் கோவிலில் நாகபஞ்சமி விழா
சிவகிரி அருகே நாகாத்தம்மன் கோவிலில் நாகபஞ்சமி விழா
சிவகிரி
சிவகிரி அருகே செட்டிதோட்டம் கீழ்பவானி வாய்க்கால் கரையில் சுயம்பு புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாகபஞ்சமி மற்றும் கருடபஞ்சமி விழா கடந்த 20-ந் தேதி கணபதியாகத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் வளாகத்தில் உள்ள கன்னிமூலகணபதி, முருகர், பெரியகாண்டியம்மன், தங்காயாள், கன்னிமார்கள், ஸ்ரீமாயவர், அண்ணமார்சுவாமிகள், மாசி பெரியண்ணன், மகாமுனி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், மூலவராகிய நாகாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
நேற்று காலை நாகபஞ்சமி மற்றும் கருட பஞ்சமியை முன்னிட்டு புற்றுக்கண்ணுக்கு பால்வார்த்து பக்தர்கள் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 2 நாட்களும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.