நாகர்கோவில்-தெலுங்கானா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்: தெற்கு ரெயில்வே தகவல்
மதுரை, நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடாவிற்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக மதுரை, நாகர்கோவிலில் இருந்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவிற்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, பிப்ரவரி 7, 14, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில் மட்டும்) மதுரையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07192) மறுநாள் காலை 7.05 மணிக்கு காச்சிகுடா சென்றடையும்.
பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) நாகர்கோவிலில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (07436) மறுநாள் காலை 6.30 மணிக்கு காச்சிகுடாவிற்கு சென்றடையும்.
பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) ஈரோட்டில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (07190) மறுநாள் காலை 7.30 மணிக்கு மராட்டிய மாநிலம் ஹாசூர் சாகிப் நந்தேடு ரெயில் நிலையத்திற்கு சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.