புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நற்கருணை பவனி
கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நற்கருணை பவனி நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையம் அருகில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. 156 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று நற்கருணை பவனி நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஆலய நுழைவுவாயிலில் உள்ள கெபியில் நற்கருனை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இந்த நற்கருணை பவனியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை பல்வேறு அண்பியங்கள் சார்பில், தினமும் மாலை 5.30 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகிறது. 10-ந் தேதி காலை 6,7,8 மணிக்கு திருப்பலிகள் நடக்கிறது. 10 மணிக்கு மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பலி, பங்கு தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஆரோக்கிய மாதா ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் தலைமையில் ஆலய விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.