நல்லகண்ணு உடல்நிலை சீராக இருக்கிறது - ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி 'டீன்' தகவல்


நல்லகண்ணு உடல்நிலை சீராக இருக்கிறது - ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி டீன் தகவல்
x

கோப்புப்படம்

நல்லகண்ணு உடல்நிலை சீராக இருப்பதாக ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி ‘டீன்’ தேரணிராஜன் தெரிவித்தார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 97) காய்ச்சல் காரணமாக கடந்த 1-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால், பொது மற்றும் சிறுநீரகவியல் துறை டாக்டர்கள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

அவரது உடல்நிலை குறித்து ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியின் 'டீன்' டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது:-

நல்லகண்ணுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு ஏற்பட்ட காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளது. சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக ரத்தத்தில் கிருமி உள்ளதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் அல்லது எச்.1.என்.1 வைரசின் பாதிப்பு என்பது இல்லை. நல்லகண்ணு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார் என்று அவர் கூறினார்.


Next Story