நல்லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்புமனு தாக்கல்


நல்லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்புமனு தாக்கல்
x

நல்லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெம்பர் 10. முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லி பாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகிய இடங்கள் காலியாக உள்ளதால் இவற்றிற்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கியது. இதில் நெம்பர் 10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக்கள் பெற தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கிராம ஊராட்சிகளான நல்லட்டிபாளையம், சொக்கனூர், குருநல்லிபாளையம் ஆகிய ஊராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அந்த அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நல்லட்டிபாளையம் ஊராட்சி 4- வார்டு உறுப்பினர் பதவிக்கு மல்லையசாமி (வயது 68) என்பவர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மு.பொன்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மற்ற எந்த பதவிக்கும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 27 ந் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28 -ந் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் 30 -ந் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்பப் பெறலாம். இதையடுத்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். வாக்குப்பதிவு வருகிற (ஜூலை) 9-ந்தேதி காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. 12- ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


Next Story