நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், உரிமையை பெற்றுத்தர மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்தும், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை நிலைநாட்டாத மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் வான்மதி வேலுச்சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். மாநில ஆளுமை குழு உறுப்பினர் செல்வம், தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா ஜே.மனோகர், செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி நீரை தமிழகத்தக்கு தர மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை நிலைநாட்டாத மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.






