மாநில அளவிலான கால்பந்து போட்டி: நாமக்கல் வீராங்கனைகள் தீவிர பயிற்சி

மாநில அளவிலான கால்பந்து போட்டி:  நாமக்கல் வீராங்கனைகள் தீவிர பயிற்சி
x

மாநில அளவிலான கால்பந்து போட்டி: நாமக்கல் வீராங்கனைகள் தீவிர பயிற்சி

நாமக்கல்

ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து மற்றும் கபடி போட்டி வருகிற 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மேற்பார்வையில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

நாமக்கல் விளையாட்டு விடுதி கால்பந்து அணியை பொறுத்தவரையில் இப்போட்டிகளில் 5 முறை தங்கப்பதக்கம் வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story