நாமக்கல் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 686 மனுக்கள் பெறப்பட்டன


நாமக்கல்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 686 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 686 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 686 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 70 பேருக்கு, ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 956 மதிப்பில் சைக்கிள்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தேவிகாராணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story