நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-1 போட்டித்தேர்வை 5,398 பேர் எழுதினர் 2,953 தேர்வுக்கு வரவில்லை


நாமக்கல் மாவட்டத்தில்  குரூப்-1 போட்டித்தேர்வை 5,398 பேர் எழுதினர்  2,953 தேர்வுக்கு வரவில்லை
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-1 போட்டித்தேர்வை 5,398 பேர் எழுதினர் 2,953 தேர்வுக்கு வரவில்லை

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-–1 போட்டித்தேர்வை 5,398 பேர் எழுதினர்.

குரூப்-1 போட்டித்தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-–1 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் ஒரு தேர்வு அறைக்கு 20 பேர் வீதம் தேர்வு எழுதும் வகையில் 418 தேர்வு அறைகளில் தேர்வர்கள் அமர்ந்து எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதேபோல் 20 தேர்வர்களுக்கு தலா ஒரு அறை கண்காணிப்பாளர், 27 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர், தேர்வு மையத்திற்கு தலா ஒரு ஆய்வு அலுவலர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உதவி கலெக்டர்கள் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 2 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

5,398 பேர்

தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 9 நடமாடும் குழுவினர் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் உள்பட தேர்வு பணி பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வது, விடைத்தாள்களை பெற்று வருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-–1 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை எழுத 8 ஆயிரத்து 351 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதனிடையே நேற்று நடந்த போட்டித்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 398 தேர்வர்கள் தேர்வை எழுதினர். மேலும் 2 ஆயிரத்து 953 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story