நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில், 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில், 2-வது நாளாக  தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்- மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 25-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்தபடி தினசரி ஊதியமாக ரூ.620 வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ததற்கான கார்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறி இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story