நாமக்கல்லில் கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


நாமக்கல்லில்  கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்  500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்பட 15-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.


Next Story