6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். மின்வாரியத்தின் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோனிஷா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் லலிதா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு நிர்வாகி சரசு, மாவட்ட செயலாளர் மீனா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்மார்ட் மீட்டர் கணக்கெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். பால் விலையை குறைக்க வேண்டும். மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு பணிந்து போககூடாது என்பது உள்ளிட் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயாலளர் அன்புமணி, சம்மேளனத்தின் மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story