நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் செயல் அலுவலர் எச்சரிக்கை


நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில்  குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்  செயல் அலுவலர் எச்சரிக்கை
x
நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும் தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story