ஆங்கில புத்தாண்டையொட்டிமலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்நகரின் அழகை கண்டு ரசித்தனர்


ஆங்கில புத்தாண்டையொட்டிமலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்நகரின் அழகை கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. வரலாற்று சின்னமாக திகழும் இந்த மலைக்கோட்டைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வந்து கோட்டையின் அழகையும், நகரின் அழகையும் ரசித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டான நேற்று விடுமுறை என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக மலைக்கோட்டைக்கு படையெடுத்தனர். மலையின் உச்சி பகுதிக்கு சென்ற அவர்கள் கோட்டையின் அழகை கண்டு பிரம்மித்தனர். மேலும் அங்கிருந்தபடி நாமக்கல் நகரின் அழகையும் கண்டு ரசித்தனர்.

அதேபோல் செலம்பகவுண்டர் பூங்காவிலும் நேற்று புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கூட்டம் களை கட்டியது. அங்குள்ள ஊஞ்சல், ராட்டினம் போன்றவற்றில் ஆடி சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story