காவிரி, திருமணிமுத்தாறு, சரபங்காநதிகளை இணைக்க வலியுறுத்தி மாரத்தான்நாமக்கல்லில் நடந்தது
காவிரியில் வரும் உபரிநீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் மாரத்தான் நடைபெற்றது. நாமக்கல் கொங்குநாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். டி.எம்.காளியண்ணன் பவுண்டேசன் நிறுவன தலைவர் டாக்டர் செந்தில் முன்னிலை வகித்தார். சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், காளியண்ணனின் மகனுமான ராஜேஸ்வரன் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 கி.மீட்டர், பெண்களுக்கு 5 கி.மீட்டர், பெரியவர்களுக்கு 10 கி.மீட்டர் என்ற முறையில் 3 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நாமக்கல் கொங்கு மண்டபத்தில் இருந்து வள்ளிபுரம் வரை இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மீண்டும் கொங்கு திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.