நாமக்கல் அருகேமாநில சிலம்பம் போட்டி200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


நாமக்கல் அருகேமாநில சிலம்பம் போட்டி200 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள நல்லூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. போட்டியை நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிலம்பம் தனித்திறன், இரட்டை கம்பு, சுருள் வாள், வேல் கம்பு என 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு இணை செயலாளர் மாரியப்பன், வக்கீல் பிரபாகரன், பள்ளி தாளாளர் ஹெர்பர்ட் ஆமோஸ் ஆகியோர் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர். இதையொட்டி உலக சாதனை படைத்த கலைக்கூட மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஏகலைவா கலைக்கூட நிர்வாக இயக்குனர் நவீந்த், செயலாளர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.


Next Story