நாமக்கல் அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு


நாமக்கல் அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சென்னை- கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திட்டத்தின் தலைமை பொறியாளர் செல்வன் நேற்று ராசிபுரம் முதல் நாமக்கல் வரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சாலையின் தரம் மற்றும் செயலாக்கம் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் விரிவாக்க பணிக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடும் பணியையும் அவர் பார்வையிட்டார். பணிகளை தரமாகவும், கொடுக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் செல்வநாதன் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.


Next Story