நாமக்கல்லில்பார்வை திறன் குறைபாடு ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி


நாமக்கல்லில்பார்வை திறன் குறைபாடு ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் ஹோப் பவுண்டேஷன் இணைந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் பார்வை திறன் குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கரன் பயிற்சியை தொடக்கி வைத்தார். ஆவரங்காடு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், ஹோப் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் அதிபன் மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

இதில் விசைப்பலகை நோக்கு நிலை, விண்டோஸ் இயக்க முறைகளை புரிந்து கொள்ளுதல், கோப்புகள் மற்றும் கோப்புறை மேலாண்மை, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்வது ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி செய்திருந்தார். இதில் 33 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்


Next Story