நாமக்கல் மாவட்டத்தில்பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில்பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட 100 பேருக்கு (தனி நபர் அல்லது அமைப்புகள்) பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் அல்லது பசுமை தொழில்நுட்பம், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 பேரை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யும். அதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story