நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக20 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்


நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக20 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 March 2023 7:00 PM GMT (Updated: 1 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை 20 அரசு பள்ளிகளில் நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல், திருச்செங்கோடு நகராட்சி பகுதிகள் மற்றும் கொல்லிமலை என மொத்தம் 51 அரசு பள்ளிகளில் 3,183 மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

2,594 மாணவ, மாணவிகள்

இந்த நிலையில் இத்திட்டம் நாமக்கல் நகராட்சியில் 2-ம் கட்டமாக சின்னமுதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் ரெங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டிசெட்டிபட்டி, முதலைப்பட்டி புதூர் மற்றும் காவேட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 533 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளி, மலையடிவாரம், சீத்தாராம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 20 பள்ளிகளை சேர்ந்த 2,594 மாணவ, மாணவிகள் காலை உணவு வழங்கும் திட்டம் 2-ம் கட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தேவராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story