நாமக்கல்லில்வீடுகளை இழந்த பொதுமக்கள் திடீர் தர்ணா


நாமக்கல்லில்வீடுகளை இழந்த பொதுமக்கள் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 7 March 2023 12:30 AM IST (Updated: 7 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுமார் 100 வீடுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கோர்ட்டு உத்தரவின்பேரில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து வீடுகளை இழந்த தங்களுக்கு வீட்டுமனை நிலம் வழங்கக்கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story