நாமக்கல்: தனியார் பஸ் கார் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்


நாமக்கல்: தனியார் பஸ் கார் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்
x

நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

நாமக்கல்


நாமக்கல் மாவட்டம்,ராசிபுரத்தில் இருந்து கார் ஒன்று ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் ஆத்தூரிலிருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்துபோது எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் பஸ்,கார் இரண்டும் சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தன. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயில்பட்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story