நெற்றியில் பட்டை நாமம் போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நெற்றியில் பட்டை நாமம் போட்டு  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 5:36 PM GMT (Updated: 28 July 2023 7:48 AM GMT)

பொங்கலூரை அடுத்த அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 23-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர்

பொங்கலூரை அடுத்த அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 23-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய போராட்டத்தின் போது விவசாயிகள் பட்டை நாமம் இட்டு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நாமம் போட்டு விட்டது என்று அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சிங்கனூர் சிவநாதன் தலைமை தாங்கினார். வாசு முன்னிலை வகித்தார்.

இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், துணைப்பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, திருப்பூர் மாநகர செயலாளர் ரமேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி. மகாலிங்கம், மேற்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் பரமசிவம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லீலாவதி, பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பொங்கலூர்ளள கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருந்தொழுவு மகாலிங்கம், நஞ்சராயன் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொங்கலூர் ஒன்றிய விவசாயிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story