அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றம்


அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 28 Dec 2023 1:42 AM GMT (Updated: 28 Dec 2023 2:53 AM GMT)

பொது மக்களின் எதிர்பார்ப்புகளின்படி அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படுவதாக லல்லு சிங் எம்.பி. தெரிவித்து உள்ளார்.

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்ட செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

இதற்கிடையே அயோத்தி ரெயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்த ரெயில் நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் "அயோத்தி தாம்" என மாற்றப்படுவதாக லல்லு சிங் எம்.பி. தெரிவித்து உள்ளார். "பொது மக்களின் எதிர்பார்ப்புகளின்படி அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்படுகிறது," என்று லல்லு சிங், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய ரெயில் நிலையத்தை நாளை மறுநாள் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். ‛‛அயோத்தி தாம்'' என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தைக் குறிக்கும் சொல் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story