நாங்குநேரி விவகாரம்: கல்வி நிலையங்களில் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்
அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை,
நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கூறியிருப்பதாவது; "நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இவ்விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
எங்கள் கோரிக்கை தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக இதை மாணவர்களிடம் பரப்பிய நபர்கள் யார் அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சாதி, மத அமைப்புகள் அதற்குரிய அடையாளத்துடன் செயல்படாமல் பொது அமைப்பு போல் காட்டி கொண்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபடுகின்றனர்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story